ஒன்னு இல்ல ரெண்டு.. விஜய்க்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை

Vijay Rashmika Mandanna
By Kathick May 25, 2022 12:15 PM GMT
Report

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சமீபத்தில், இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும், அதனால் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், ராஷ்மிகாவை தொடர்ந்து இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க Mehreen Pirzada நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இதற்குமுன் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.