விஜய்க்கும் திரிஷாவுக்கும் ஏற்பட்ட சண்டை!! காரணமே விக்ரம் தான்.. பிரபல கூறிய அதிர்ச்சி தகவல்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா தற்போது விடாமுயற்சி, தக் லைப், ராம், Identity, விஸ்வரம்பா உள்ளிட பல படங்களில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் திரிஷா சிக்காத பிரச்சனையே கிடையாது என்று கூறும் அளவிற்கு அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வந்தார். மேலும் நிச்சயம் வரை சென்று திருமணம் நின்று போனதால் தன் மார்க்கெட்டை இழந்தார்.

அதன்பின் ரீஎண்ட்ரி கொடுத்து வரும் நிலையில், சில பிரபலங்கள் திரிஷா குறித்த சில விஷயங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபத்தில் கூட சுசித்ரா, திரிஷாவின் பார்ட்டிகள் பற்றி பேசியதும் பூதாகரமாக வெடித்தது. அதையெல்லாம் சகித்துக்கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் சமீபத்தில் அளித்த பேட்டியில், திரிஷா விஜய், விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடிக்கும் போது அவர்களை காதலித்து வந்தார். இடையில் விஜய், திரிஷா நடிக்காமல் போக என்ன காரணம் என்றால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான். ஆதி படத்தில் திரிஷா நடிக்க வாய்ப்பு தருவதாக விஜய் இல்லை.
விக்ரமுக்கும் திரிஷாவுக்கு இடையில் கெமிஸ்ட்ரி வந்ததால் விஜய்யுடன் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம். சண்டை இருந்ததும் உண்மை தான். புது நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாகும் போது நடிகர்கள் மனநிலை மாறும்.

அப்படி தான் திரிஷாவை விட்டுவிட்டு நடிகை அசினுடன் ஜோடியாக சேர்ந்தார் விஜய். படவாய்ப்பு தனக்கு தராமல் வேறொருவருக்கு கொடுத்ததால் தான் விஜய் மீது திரிஷா சண்டை போட காரணம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக திரிஷாவும் வரலாம் என்று கூறியிருக்கிறார் பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப்.
பொறுப்பு துறப்பு : மேற்க்கூறப்பட்ட தகவல்களை பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கூறியதை தான் செய்தியாக விடுப்பு இணையத்தளத்தில் பகிர்ந்துள்ளோம். இந்த தகவலுக்கும் விடுப்பு தளத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.