அடி பாதாளம் சென்ற சீரியல் டிஆர்பி.. எண்ட் கார்ட் போடும் முடிவில் விஜய் டிவி
Tamil TV Serials
By Yathrika
விஜய் டிவி
ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்கள் கவனத்தை பெற்ற விஜய் டிவி இப்போதெல்லாம் சீரியல்களிலும் கலக்க தொடங்கிவிட்டனர்.
சிறகடிக்க ஆசை, மகாநதி, அய்யனார் துணை போன்ற சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம்.
இப்படி நிறைய சீரியல்கள் டிஆர்பியில் டாப்பில் இருந்தாலும் சில தொடர்களின் பார்வையாளர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். அப்படி டிஆர்பியில் குறையும் தொடர்களை எந்த டிவியாக இருந்தாலும் முடித்துவிடுவார்கள்.
அப்படி விஜய் டிவியின் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகிறது, எந்த தொடர் என்றால் ஆஹா கல்யாணம் தான்.