கழட்டிவிட்ட விஜய் டிவி.. வாய்ப்பில்லாமல் ஜாக்குலின் செய்த செயல்
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்தவர் ஜாக்குலின். அவர் ரக்ஷன் உடன் சேர்ந்து கலக்க போவது யாரு உள்ளிட்ட ஷோக்களை தொகுத்து வழங்கி ரசிகர்களை அதிகம் ஈர்த்தார்.
கழட்டி விட்ட விஜய் டிவி
அதற்கு பிறகு தேன்மொழி பிஏ என்ற விஜய் டிவி சீரியலில் நடித்தார். மேலும் நயன்தாரா உடன் கோலமாவு கோகிலா படத்தில் அவரது தங்கையாக நடித்தார்.
விஜய் டிவியில் அவர் நடித்து வந்த சீரியல் முடிவுக்கு வந்த பிறகு அவரை சேனல் அப்படியே கழட்டிவிட்டுவிட்டது. அடுத்து எந்த வாய்ப்பும் இல்லாமல் தான் இருந்து வந்தார் அவர்.

வாய்ப்பு கொடுத்த நடிகர்
இந்நிலையில் தற்போது அவர் வேறு வழி இல்லாமல் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணிகளை செய்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் ஜீவாவின் நிகழ்ச்சி பற்றிய பிரெஸ் மீட் நடந்தது. அதை ஜாக்குலின் தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அந்த வாய்ப்பு கொடுத்த ஜீவாவுக்கு நன்றி கூறி இருக்கிறார்.