போச்சா.. சொகுசு கார்களை வாங்கி குவித்த மணிமேகலை வீட்டில் பெரிய திருட்டு! போலீசில் புகார்
Manimegalai
By Parthiban.A
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோவில் காமெடியில் கலக்கி வருகிறார் மணிமேகலை. அவர் ஒரு எபிசோடுக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பெறுகிறார். அது மட்டுமின்றி சொந்தமாக youtube சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். அதிலும் அவர் நன்றாக சம்பாதித்து வருகிறார்.
தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொண்டு மணிமேகலை சமீப காலமாக சொகுசு கார்களை வாங்கி குவித்து வருகிறார்.
யார் கண் பட்டதோ தெரியவில்லை தற்போது அவர் வீட்டில் பெரிய திருட்டு நடந்திருக்கிறது. அவர்கள் வைத்திருந்த விலையுயர்ந்த கேடிஎம் பைக் தற்போது திருட்டு போயிருக்கிறது. போலீசில் புகார் அளித்திருக்கிறார்களாம்.
தாங்கள் கஷ்டப்பட்டு வாங்கியது அது, அசோக் நகரில் உள்ள நண்பரின் இடத்தில் நிறுத்தி வைத்திருந்தோம், திருடி சென்றுவிட்டார்கள் என மணிமேகலை இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருக்கிறார்.