விஜய் டிவி நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.. முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறார்..
Tamil Actress
By Parthiban.A
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சீரியல்கள் நடிக்க வரும் நடிகைகளின் காலம் போய் தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று அதன் மூலமாக வெள்ளித்திரைக்கு போகும் நடிகைகள் தான் அதிகம்.
தற்போது விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2ம் சீசனில் நடித்து வருபவர் ஸ்வாதி கொண்டே. அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் அவர் போட்டிருந்த பதிவை பார்த்துவிட்டு அவர் சீரியலில் இருந்து விலகுகிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
கார்த்திக்கு ஜோடியா?
இந்நிலையில் தற்போது ஸ்வாதிக்கு திரைப்பட வாய்ப்பு வந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் கார்த்தி ஜோடியாக அவர் அவரது 27ம் படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.
இந்த படத்தை 96 பட புகழ் இயக்குனர் பிரேம்குமார் தான் இயக்க போகிறார்.