சண்டை காட்சியில் கைக்கு கூட டூப் போட்ட விஜய்.. இதுல அடுத்த சூப்பர்ஸ்டார் வேற
வாரிசு
தமிழ் நாட்டின் மாஸ் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடந்த மாதம் வாரிசு திரைப்படம் வெளியானது.இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருந்தது நாம் அறிந்ததே.
அதிக எதிர்பார்ப்பில் வெளியான "வாரிசு" திரைப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இருப்பினும் இப்படம் உலகமுழுவதும் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

கைக்கு டூப்பா
வாரிசு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல ட்ரோல்களை சந்தித்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சியில் கைக்கு கூட விஜய் டூப் போட்டதாக அஜித் ரசிகர் ஒருவர் கிண்டல் செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் .
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதோ அந்த வீடியோ
சண்டை காட்சிகளில் கை-க்கு டூப் போட்ட விஜய் அண்ணா.. டூப் கலைஞர்களுக்கு வாய்ப்பு தரவே விஜய் இதை செய்தார் என பிஸ்மி மற்றும் விஜய் ரசிகர்கள் பாராட்டு. #Thunivu #AK62 pic.twitter.com/4HTscdqhZN
— AJITH ONLINE TEAM ?️?? (@jaba_AKFC) February 12, 2023