சிவாஜிக்கு பயந்து வீட்டின் பின் வாசல் வழியாக சென்ற விஜய்.. அப்பாவின் முன்னாடியே அசிங்கப்பட்ட சம்பவம்?
சிவாஜி கணேசன்
நடிப்பு திறமையால் மக்களை கட்டிப்போட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரின் நடிப்பாற்றலை தாண்டி அவருக்கு இருக்கும் நற்குணங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என அவருடன் பணியாற்றிய பல நடிகர்கள் கூறியுள்ளனர்.
உடை நிலை மோசமாக இருந்தாலும், சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து விடுவார் என இயக்குனர் கே.ஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் ஒரு பேட்டியில் நடிகர் திலகம் சிவாஜியுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

ஒன்ஸ் மோர்
1998 -ம் ஆண்டு சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ' ஒன்ஸ் மோர்'படத்தில் சிவாஜி கணேசன், விஜய், சிம்ரன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இப்படத்தின் ஷூட்டிங் ஒரு வீட்டில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது சந்திரசேகரும், விஜய்யும் படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு முன்பே சிவாஜி கணேசன் மேக்அப் போட்டு கொண்டு ரெடியாக இருந்துள்ளாராம்.
இதை பார்த்த விஜய்யும், அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரும் சிவாஜிக்கு தெரியாமல் காரை நிறுத்தி விட்டு வீட்டின் பின் வாசல் வழியாக உள்ளே சென்றுள்ளனர்.
சில மணிநேரம் கழித்து விஜய் மேக்கப் போடும்போது வந்த சிவாஜி அவரை நோக்கி "வீட்டின் பின் வாசல் வழியாக வந்தால் எனக்கு தெரியாதா" என கேட்டாராம்.
