அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம்..குறை சொல்ல முடியாது!! விஜய் யேசுதாஸ் இப்படி சொல்லிட்டாரே
பிரபல பாடகர் யேசுதாஸின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் விஜய் யேசுதாஸ்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட விஜய் யேசுதாஸ் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், படத்துக்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து எப்படியும் ஒருவரை பயன்படுத்த நினைப்பது தவறு. கிடைத்த வாய்ப்புகள் போய்விடுமோ என்ற பயத்தால் அதனை வெளியில் சொல்ல பயப்படுகிறார்கள்.
நான் ஒரு ஆணாக இருப்பதால் அந்த மாதிரியான கஷ்டங்களை அனுபவித்ததில்லை. ஆனால் இந்தத் தொழிலில் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் மட்டும் தான் இன்னும் அப்படி இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தொழிலையும் குறை சொல்ல முடியாது.
மேலும் இந்த துறையில் மட்டும் இல்லை எல்லாம் துறையிலும் இருக்கிறது. வணிக மற்றும் கார்ப்பரேட் துறைகளிலும் இத்தகைய அட்ஜெஸ்மெண்ட் உள்ளன. மக்கள் மாறுவதைத் தவிர வேற வழி ஒன்றும் இல்லை என்று விஜய் யேசுதாஸ்.