விஜய்யுடன் 20 வருஷ பகை!! அண்ணன் போட்ட வலையில் சிக்கிய யுவன் சங்கர் ராஜா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் கோடியில் சம்பளம் வாங்கும் டாப் நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய் லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்து வந்தது.
அந்தவகையில் கஸ்டடி படத்திற்கு பின் இயக்குனர் வெங்கட் பிரபு தான் இயக்கவுள்ளார் என்று தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. பெரும்பாலும் வெங்கட் பிரபு என்றால் அவர் படத்தில் யுவன் சங்கர் ராஜா இருப்பார் என்பது அனைவருக்கு தெரிந்த ஒன்று.
அப்படி விஜய்யுடன் 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக யுவன், அவரின் கூட்டணியில் சேராமல் இருந்து வந்தார்.
தற்போது 20 ஆண்டுகள் கழித்து யுவன் சங்கர் ராஜா தளபதி 68 படத்தில் இசையமைக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.
மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் விஜய்க்காக ஒரு பாடலை யுவன் பாடி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகப்பெரியளவில் இந்த விசயத்தை கொண்டாடி வருகிறார்கள்.

