மதிக்காத அஜித்!! வீட்டிற்கே சென்று மிரட்டிய விஜயகாந்தை காசு கொடுத்து ஆஃப் செய்த AK
சினிமாத்துறையில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் தான் நடிக்கும் படத்தின் பிரமோஷன் மற்றும் பேட்டிகளையும் ஒதுக்கி தனக்கான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். ஆனால் 10 வருடத்திற்கு முன் சினிமா மற்றும் நடிகர் சங்கம் சார்பாக நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆஜராகிவிடுவார் அஜித்.
அப்படி இருந்த அஜித் மாற காரணமே சில சம்பவங்கள் தானாம். ஏற்கனவே அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்களுக்கு பாசத்தலைவனுக்கு பாராட்டி விழா 2010ல் நடந்தபோது, அஜித் கருணாநிதியை பாராட்டிவிட்டு சமுக நிகழ்ச்சிகளுக்கு எங்களை போன்றவர்களை மிரட்டி வரவழைக்கிறார்கள் என்றும் எங்களுக்கு அரசிய வேண்டாம், யாரும் எங்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று மேடையிலேயே பேசிய விசயம் பெரியளவில் பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து ரஜினி அதற்கு எழுந்து நின்று கைத்தட்டியதால் இருவரையும் வீட்டிற்கு கருணாநிதி கூப்பிட்டு பேசினார். இந்த சம்பவத்திற்கு பின் விஜயகாந்துக்கும் அஜித்திற்கு நடந்த சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் சங்கம் சார்பாக நிகழ்ச்சி நடத்த ஒரு கலை நிகழ்ச்சி நடத்தினார் விஜயகாந்த்.
அப்போது அஜித்தை அழைக்க அவர் வரமுடியாது என்று கூறியிருக்கிறார். இதனால் கடுப்பான விஜயகாந்த், வீட்டிற்கே சென்று நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்றும் இல்லையென்றால் நீங்கள் படம் நடிக்க முடியாது. உங்களுக்கு சங்கம் ஒத்துழைப்பு தராது என்று மிரட்டி இருக்கிறார்.
அப்படி கேட்டும், ஆனால் அஜித் தன் முடிவில் கண்டிப்போடு இருந்துள்ளார். நிகழ்ச்சி நிதிக்காக தானே என்று கூறி நிதி பணத்தை கொடுத்து விஜயகாந்தை ஆஃப் செய்திருக்கிறாராம். இதனால் எதுவும் சொல்ல முடியாமல் விஜயகாந்த் சென்றதாகவும் அப்பணம் வேண்டாம் என்று விஜயகாந்த் தூக்கி எறிந்ததாகவும் சில தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.