பரதேசி உன் மனசு என்ன துருபிடித்த இரும்பா!! வடிவேலுவை வெளுத்து வாங்கிய பயில்வான்..
தமிழ் சினிமாவில் நடிகராகவும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 2023 டிசம்பர் 28 ஆம் தேதி மரணமடைந்த செய்தி இந்தியா முழுவதும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்திய அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என்று அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வந்தனர்.
விஜயகாந்த் மறைவுக்கு இரு முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் வடிவேலுவின் வரவேற்பை பலரும் எதிர்ப்பார்த்திருந்தனர். விஜய் மட்டும் அன்று இரவு, தன்னை உருவாக்கிய விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆனால் வடிவேலு மட்டும் அவரது இறப்பினை கண்டுக்கொள்ளவே இல்லை. வைகைப்புயல் வராததற்கு பலர் கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் வடிவேலுவை வெளுத்து வாங்கியிருக்கிறார்.
பிரதமர், அமைச்சர்கள், உள்துறை அமைச்சர்கள், முதல்வர் போன்றவர்கள் விஜயகாந்த் இறுதி சடங்கிற்கு வந்தார்கள். மத்திய அரசு, தமிழக அரசு இணைந்து அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சிறப்பாக செய்தனர். ஆனால் இந்த பரதேசி, வடிவேலு வரவில்லை என்பது கண்டனத்திற்கு உரியது. இதனால் வடிவேலுவுக்கு மரியாதை இன்னும் குறையும். நீ வரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு வீடியோ வெளியிட்டிருக்கலாம். என் முன்னேற்றத்திற்கு கமல், மதுரைக்காரர் விஜயகாந்த் என்று சொன்னியே.
இனிமேல் வடிவேலு படம் வந்தால் தமிழக மக்கள் பார்ப்பார்களா?. பணமும் சொத்தும் நகையும் உன்னை காப்பாத்தாது? பேர் தான் காப்பாற்றும். 84 வயதான கவுண்டமணி வந்து அழுதார். அந்த வயதில் வந்து சென்றார். அவரைவிடவா நீ உயர்ந்துட்டாய். சாவு நடனமாடினவன் நீ, ராஜ்கிரண் தயவால் நடிகர் ஆனாய், ராஜ்கிரணுக்கே துரோகம் தானே செய்தாய். 5 லட்சம் வாங்குனதுக்கு மட்டுமில்லாமல் அவருக்கு மன உளைச்சலும் கொடுத்துவிட்டாய்.
வடிவேலுவை நான் திட்டவில்லை அறுவருப்பாக பேசவில்லை. மனமே இல்லாதவன். உனக்கு மனிதாபிமானம் இல்லை. விவேக்குடன் ஒன்றாக நடித்தாய், அவர் இறப்புக்கும் வரவில்லை. மனோபாலா, உன் மீது அன்பு வைத்திருந்தார், அவர் சாவுக்கும் வரவில்லை. மயில்சாமி இறப்புக்கு சென்று மனைவி, பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறவில்லை.
பரதேசி போண்டா மணி நெஞ்சில் ஏறி மிதித்திருக்கிறாய், அவன் சாவுக்கும் நீ வரவில்லை என்று கண்டபடி பேசியிருக்கிறார் பயில்வான். நீ வெளியில் போனால், கேப்டன் இறப்பு வரவில்லை என்று காறித்துப்ப மாட்டார்களா? என்றும் கேள்வி கேட்டிருக்கிறார் பயில்வான்.