இயக்குனருடன் போட்ட சண்டை!! 30 ஆண்டுகள் கமல் ஹாசனை ஜனகராஜ் ஒதுக்க காரணம் இதான்..
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த குணச்சித்திர நடிகரில் ஒருவர் நடிகர் ஜனகராஜ். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் முக்கிய ரோலில் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.
பல ஆண்டுகள் உடல்நலக்குறைவால் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜனகராஜ், 96 படத்தில் பள்ளி வாட்ச்மேனாக நடித்தார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் படங்களில் அதிகமாக நடித்து வந்த ஜனகராஜ், ஒரு கட்டத்தில் கமல் ஹாசனுடன் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
கடைசியாக குணா படத்தில் தான் அவர் கமலுடன் நடித்திருந்தார். அப்படத்தில் இயக்குனர் ஏற்பட்ட சண்டை தான் கமல் ஹாசனை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஒதுக்கி வந்திருக்கிறார். குணா படத்தினை இயக்கிய சந்தான பாரதி, டப்பிங்கின் போது ஜனகராஜ் பேசியது பிடிக்காமல் போனது.
மறுபடியும் பேசு என்று சந்தானபாரதி சொல்ல மீண்டும் பேசியிருக்கிறார் ஜனகராஜ். அதுவும் சரியாக இல்லை என்று மீண்டும் பேசு என்று சந்தான பாரதி கூறியிருக்கிறார். இதனால் கோபமடைந்துள்ளார் ஜனகராஜ். இருவரும் விளையாட்டாக பேசியது சண்டையில் முடிந்ததால் அந்த அறையில் இருந்து வெளியேறியிருக்கிறார்.
தான் நடிப்பது நன்றாக இல்லை என்று இயக்குனர் மீண்டும் மீண்டும் சொன்னால் கோபப்படுவாராம் ஜனகராஜ். அதனால் தான் கமல் ஹாசன் படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டாராம். இதேபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட இயக்குனர்களிடம் சண்டை போட்டிருக்கிறாராம் நடிகர் ஜனகராஜ்.