ஒரு கோடி அப்பு! முதுகில் குத்தி வெற்றி பெற்றேனா! சர்வைவர் விஜி வீடியோ.

television vijayalakshmi arjun saran umapathy survivio
By Edward Dec 14, 2021 03:55 PM GMT
Report

தமிழ் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜி தமிழ் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு செய்தது சர்வைவர். நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய இந்தி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக நடிகை விஜயலட்சுமி தேர்ந்தெடுத்து ஒரு கோடியை தட்டிச்சென்றார்.

பைனலில் விஜயலட்சுமி, வனேசா, சரண் மூவரும் போட்டிப்போட்டனர். அவர் வெற்றி பெற்றது ஒருசிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் உமாபதி தான் வெற்றி பெருவார் என்று நினைத்தோம். கடைசியில் விஜயலட்சுமி அவரை முதுகில் குத்திவிட்டு வெற்றி என்று கொண்டாடி வருகிறார்.

4ஆம் இடத்தினை பிடித்து வெளியேறிய உமாபதிக்கு பலர் பாராட்டையும் ஆதரவையும் கொடுத்துள்ள வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு வீடு திரும்பிய விஜயலட்சுமி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் நானே வெளியில் இருந்து என்னை பார்த்த போது கோபம் வந்தது. ஆனால் அங்கிருந்து பார்க்கும் போது நான் ஒரு சூப்பர் மாம் என்று உணர்ந்தேன். என்னுடைய இடத்தில் இருந்தும் பாருங்கள் என்று கூறி பேசியுள்ளார்.