நிச்சயதார்தம் முடிந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் விஜயகாந்தின் மகன் ! என்ன காரணம் தெரியுமா

Vijayakanth Marriage
By Jeeva Aug 03, 2022 06:30 AM GMT
Report

கேப்டன் விஜயகாந்த்

ஒட்டுமொத்த தமிழக மக்கள் அனைவரும் கேப்டன் என கொண்டாடும் புகழை உடையவர் விஜயகாந்த்.

 தமிழ் சினிமாவின் ரஜினி, கமல் ஹாசனை தொடர்ந்து தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தார் விஜயகாந்த். அவரின் புரட்சிகரமான திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் அவரின் அரசியல் பிரவேசத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட விஜயகாந்த், அதன்பின் உடல்நல குறைவின் காரணமாக திரைப்படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு கூட மருத்துமனைவியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் நலமுடன் வீடு திரும்பினார்.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்திற்கு சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் என இரு மகன்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.

 இதில் அவரின் மூத்த மகனான விஜய பிரபகரனுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கீர்த்தனா என்பவருடன் நிச்சயதார்தம் ஆனது, அவர் கோயம்பத்துரை சேர்ந்த தொழிலதிபரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயதார்தம் முடிந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் விஜயகாந்தின் மகன் ! என்ன காரணம் தெரியுமா | Vijaykanth Son Marriage Rumours

மகனின் திருமணம்

இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்பும் இவர்களின் திருமணம் இன்னும் நடக்கவில்லை. திருமணத்தை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வைக்க வேண்டும் என விஜயகாந்த் விரும்புவதாகவும், அவரது தேதிக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர்களின் திருமணம் இந்தாண்டிற்குள் நடக்கும் என சொல்லப்படுகிறது, ஆனால் கேப்டன் விஜயகாந்த் தரப்பில் இருந்து இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

நிச்சயதார்தம் முடிந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் விஜயகாந்தின் மகன் ! என்ன காரணம் தெரியுமா | Vijaykanth Son Marriage Rumours

தி லெஜண்ட் சரவணன் அருளின் அம்மாவை பார்த்துள்ளீர்களா