வசூலே இத்தனை கோடி தானா!! GOAT தயாரிப்பாளருக்கு நஷ்டமா? லாபமா?

Vijay Venkat Prabhu Gossip Today Greatest of All Time
By Edward Sep 12, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

GOAT 7 நாள் வசூல்

கோட் தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் 325 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் கோட் படம் ரூ 1000 கோடி வசூல் செய்ய வேண்டும் என கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர்.

ஏன்பா இந்த படம் ஏற்கனவே தெலுங்கு, ஹிந்தி, கேரளா, கர்நாடகால வசூலே சுத்தமா வரல, முதல் 4 நாள் வசூல் தான் இப்ப வரைக்கும், அதற்குள் ரூ 1000 கோடி வேண்டுமா என கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.

வசூலே இத்தனை கோடி தானா!! GOAT தயாரிப்பாளருக்கு நஷ்டமா? லாபமா? | Vijays Goat Day 7 Collection And Loss Or Profit

இந்நிலையில், 7 நாட்களில் கோட் படம் 350 அல்லது 360 கோடி வரை வசூலித்திருக்கும் என்றும் இந்த வாரமும் படத்தை பார்க்க கூட்டம் வரும் என்பதால் அதிகபட்ம் 500 கோடி வசூலை கோட் அள்ளும் என்றும் கூறுகிறார்கள்.

லாபமா? நஷ்டமா?

அந்தவகையில் கோட் படம் உண்மையில் லாபமா? நஷ்டமா? என்ற கேள்விக்கு தற்போது விளக்கம் கிடைத்துள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் கோட். பிகில் 180 கோடி செலவில் எடுக்கப்பட்டு 300 கோடி வரை வசூல் ஈட்டியது. அதேபோல் 400 கோடியில் எடுக்கப்பட்டு 500 கோடி வரை கோட் படம் வசூல் செய்தாலே லாபம் தான் என்றும் கூறுகின்றனர்.

வசூலே இத்தனை கோடி தானா!! GOAT தயாரிப்பாளருக்கு நஷ்டமா? லாபமா? | Vijays Goat Day 7 Collection And Loss Or Profit

ஓடிடி உரிமம் 120 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. சாட்டிலை உரிமத்தை ஜீ நெட்வொர்க் 90 கோடிக்கும் ஆடியோ ரைட்ஸ் 20 முதல் 25 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் தயாரிப்பு நிறுவனத்திற்கு கோட் படம் லாபம் தான் என்று கூறுகிறார்கள்.

இந்த ஆண்டு இதுவரையில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை ஈட்டிய படமாக கோட் இருக்கிறது. கோட் படத்தின் வசூலை அடுத்தடுத்து இந்த ஆண்டு வெளியாகவுள்ள வேட்டையன், கங்குவா போன்ற படங்கள் முறியடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.

Gallery