காத்து வாக்குல கொஞ்சம் தூங்கி வழிந்த விஜய் சேதுபதி.. அசிங்கப்பட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்..
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு, நடிகை வரலட்சுமியை வைத்து போடோ போடி படத்தினை இயக்கியவர் விக்னேஷ் சிவன். பாடலாசிரியராகவும் இயக்குனராக திகழ்ந்து வந்த விக்னேஷ் சிவனுக்கு பெரிய மைல் கல்லாக அமைந்த படம் நானும் ரெளடி தான்.
இப்படத்தில் நயன் தாராவுக்கு நடிகர் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்திருப்பார். நடிகர் தனுஷ் தயாரிப்பில் இப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தும் வசூலில் நல்ல வரவேற்பும் பெற்றது. இப்படத்தின் சில அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
தனுஷ் இப்படத்தினை தயாரிக்க பேசிவிட்டு நயன் தாராவிடமும் கதை கூறி கமிட் செய்துவிட்டேன். அதன்பின் முதல் முறை விஜய் சேதுபதியிடம் கதையை நான் கூறினேன். சில நிமிடத்தில் விஜய் சேதுபதிக்கு தூக்கம் வந்துவிட்டது. என்னடா கதை என்று வேண்டாம் என்று கூறினார்.
அதன்பின் பல நடிகர் இக்கதையை தூக்கி எறிந்துள்ளனர். இதனால் மீண்டும், விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என ஒரு வருடம் கழித்து அவரிடம் சென்று கதையை கூறினேன்.
கண்டிப்பாக நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறியபின் என் மீது நம்பிக்கை வைத்து நடித்தார். ஆனால் படம் மக்கள் மத்தியில் வேறவெவலுக்கு கொண்டுச் சென்றது என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.