மணிரத்னத்தின் மீதுள்ள கடுப்பினால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா விக்ரம்.. காரணம் என்ன

Vikram Ponniyin Selvan: I Mani Ratnam
By Kathick Jul 12, 2022 05:33 AM GMT
Report

நடிகர் விக்ரம் சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு என வதந்திகள் வெளிவந்தன. சிகிச்சை முடிந்த கடந்த இரு நாட்களுக்கு முன் நலமுடன் வீடு திரும்பினார் விக்ரம்.

மருத்துவமனையில் இருந்து வெளியேறியதும், நேற்று தன்னுடைய கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். ஆனால், சில தினங்களுக்கு முன் நடந்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்துகொள்ளவில்லை.

அப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் தான், பொன்னியின் செல்வன் விழாவில் விக்ரமால் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அது உண்மை இல்லையாம். பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் பெரிதாக இல்லை என்ற காரணத்தினால், மணி ரத்னத்தின் மீது வருத்தத்தில் உள்ளாராம் விக்ரம். அதனால், தான் பொன்னியின் செல்வன் விழாவில் விக்ரம் கலந்துகொள்ளவில்லை என்று தகவல் கூறப்படுகிறது.