எத்தனையோ பேர் சொல்லியும் விக்ரம் வாழ்க்கையை நாசமாக்கிய பிரபல இயக்குனர்

Vikram
By Tony Nov 12, 2023 09:30 AM GMT
Report

நடிகர் விக்ரம் படத்திற்கு படம் வித்தியாசமான முயற்சிகளால் ரசிகர்களை கவர்ந்து இழுப்பவர். இவர் அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் ஜனவரி 26ம் தேதி வெளிவர விருக்கின்றது, இந்நிலையில் விக்ரம் நடிப்பில் பல கோடி செலவில் சுசி கணேசன் இயக்கிய படம் கந்தசாமி.

இந்த படம் 3 மணி நேரம் மேல் ஓடும், இதை பார்த்த தயாரிப்பாளர் தாணு அப்போது இந்த படத்தின் ரன் டைமை குறைங்க என்று இயக்குனர் சுசி கணேசனுக்கு யோசனை சொன்னாராம்.

இதே போல் பலர் சொல்லி கேட்காமல் அதே ரன் டைமில் வெளியிட்டு படம் தோல்வியில் முடிய, படம் நஷ்டம் ஏற்பட்டதுமில்லாமல், விக்ரம் மார்க்கெட்டும் மிகப்பெரும் சரிவை சந்தித்தது.