படுமோசமான வரிகள்! சர்ச்சையை கிளப்பிய கமல்ஹாசன் விக்ரம் பாடல்..
Kamal Haasan
Vikram Movie
By Edward
தமிழ் சினிமாவின் ஆண்டவர் என்று அழைக்கப்பட்டு உலகநாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். பல ஆண்டுகள் கழித்து அவர் நடிப்பில் விக்ரம் படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டிரைலர் கேனஸ் விருது நடைபெறும் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை அனிரூத் அமைத்திருக்கிறார்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் முக்கிய பாடலான பத்தல பத்தல கமல் ஹாசன் வரியில் அவரே பாடியிருக்கிறார்.
பல வருடங்களுக்கு பிறகு இப்படியொரு குத்தாட்டம் போட்டும் பாட்டு பாடியுள்ளது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இப்பாடலில் சில வரிகள் கெட்ட வார்த்தையும் கலந்துள்ளது.
இதனை வைத்து எப்படி கமல்ஹாசன் இப்படியான வரிகளை முன் வைத்தார் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.