Rolex சூர்யா எண்ட்ரி? விக்ரம் படத்தில் கொளுந்துவிட்டு எரிந்த திரை..

Kamal Haasan Suriya Vikram Movie
By Edward Jun 08, 2022 09:30 AM GMT
Report

திரைப்படங்களில் வைக்கப்படும் சில பாடல்கள் நிஜ வாழ்க்கையில் எதாவதொரு தருணத்தில் ஒத்துப்போகும். அப்படி சமீபத்தில் வெளியாக நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் அனிருத் திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும் என்ற பாடலை போட்டிருப்பார்.

இதுமுற்றிலும் பீஸ்ட் படம் ஒளிப்பரப்பாகிய ஒரு தியேட்டரில் நடந்துள்ளது. படம் ஒளிப்பரப்பாகி இருக்கும் சமயத்தில் வெடி வெடித்ததால் திரை அப்படியே தீப்பிடிக்க ஆரம்பித்தது. இது இணையத்தில் வைரலானது. இதேபோல் விக்ரம் படத்திலும் நடந்துள்ளது.

கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் பல தியேட்டர்களில் ஒளிப்பரப்பாகி வசூல் வேட்டையை செய்து வருகிறது.

அந்தவகையில் பாண்டிச்சேரியை அடுத்த காலாப்பட்டில் இருக்கும் ஜெயா தியேட்டரில் விக்ரம் படம் திரையிடப்பட்டு இருக்கும் சமயத்தில், அதிவும் கிளைமேக்ஸ்ல் சூர்யா நடித்த ரோலெக்ஸ் காட்சி மிரட்டிவிட்டது. அந்த சமயத்தில் திரையின் ஓரத்தில் தீப்பிடிக்க ஆரம்பித்தது.

பின் முழுவதும் திரை கொளுந்துவிட்டு எரிந்துள்ளது. இதனால் பார்வையாளர்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓடியுள்ளனர்.

இதற்கு காரணம் மின்கசிவினால் தான் இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இதனை பீஸ்ட் பாடலை வைத்து எடிட் செய்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.