விஜய் மகனுக்கு ரூட்டை போடும் விக்ரம் மகன்! அப்போ ஹீரோயின் அந்த சீரியல் நடிகையா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கராக இருப்பவர் நடிகர் விக்ரம். பல ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் தன் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிகர் விக்ரம் மகான் படத்தில் நடித்திருந்தார். படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரம் மகன் துருவ் சமீபத்தில் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி கொடுத்து வருகிறார்.
அப்போது நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயுடனான நட்பு குறித்து பேசியுள்ளார் துருவ் விக்ரம். அதில் சின்ன வயதில் இருந்தே எனக்கு சஞ்சய் நல்ல நண்பர் தான்.
அவர் நல்ல கதையுடன் வந்தால் அவர் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் பாலிவுட் மாதிரி இரு வாரிசு நாயகர்களின் மகன்கள் இணையும் படமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விஜய் மகன் சஞ்சய்யுடன் ஜோடி போட்டு நடிக்க ஆசை என்று சீரியல் நடிகை ரவீனா தாஹா கூறியது கிசுகிசுவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.