மலையாளியா? தமிழனா? இடத்திற்கேற்ப இரட்டை வேடம் போட்டு அசிங்கப்பட்ட சியான் விக்ரம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விக்ரம். உல்லாசம், சேது, பிதாமகன், காசி, அருள், தில், சாமுராய், ஜெமினி, சாமி, அந்நியன், தெய்வத்திருமகள், ராவணன், ஐ, இருமுகன், மகான், கோப்ரா போன்ற படங்கள் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார்.

கரிகாலன்
உடலை வறுத்தி படங்களில் நடிக்கக்கூடிய நடிகர்களில் கமல் ஹாசனுக்கு அடுத்து அனைவரும் கூறுவது விக்ரம் தான். அப்படி சினிமா மீது முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இப்படத்தின் பிரமோஷனுக்காக விக்ரம் பல பேட்டிகளில் தமிழ் பற்றி பெருமையான விசயங்களை பகிர்ந்து வந்தார்.

சர்ச்சை பேச்சு
ஆனால், சில வருடங்களுக்கு முன் வெளியான இருமுகன் படத்தின் பிரமோஷனுக்காக கேரளாவிற்கு சென்று ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார் விக்ரம். அங்கு, நான் ஒரு மலையாளி, நாம எல்லோரும் மலையாளி என்று மேடையில் பேசியிருக்கிறார். இதைவைத்து நெட்டிசன்கள் இடத்திற்கு ஏற்ப மாறும் சினிமாக்காரர்களை நம்பக்கூடாது என்று தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.