Item song...நமீதாவின் அப்படியொரு குத்தாட்டம்!! நொந்துப்போய் புலம்பிய பிரபல இயக்குநர்.
விக்ரமன்
90ஸ் காலக்கட்டத்தில் சிறப்பான படங்களை இயக்கி மிகப்பெரிய அந்தஷ்த்தை தமிழ் சினிமாவில் திகழ்ந்தவர் இயக்குநர் விக்ரமன். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் சரத்குமார், ராதிகா, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்த சூர்யவம்சம் படம் ஏன் ஹிட்டானது என்றும் தெரியாமல் ஓடியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பிரியமான தோழி படத்தின் கன்னட வெர்சனை பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அட பாவிங்களா எப்படிப்பட்ட படம் இதை இப்படி பண்ணிட்டீங்களே என நொந்துபோனதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரியமான தோழி கன்னட வெர்சன்
பிரியமான தோழியில் நட்பு, காதலை தவிற வேறு எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் கன்னடத்தில் நமீதா, ஹாட் சாங்கிற்கு ஆட்டம் போட்டிருப்பார். இதி ஹைலெட் என்னவென்றால் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா பாடலை கன்னட வெர்சனில் போட்டிருந்தனர்.
பிரியமான தோழி படத்தில் ஒரு காட்சி கூட ஆபாசமாக எடுக்க மனவரவில்லை. எப்படித்தான் இப்படிப்பட்ட காட்சிகள் வைக்க தோன்றியதோ தெரியவில்லை என்று விக்ரமன் புலம்பியுள்ளார்.