சிவாஜிக்கு நோ.. 11 மணிக்கு தான் வருவேன்னு கண்டீசன் போட்ட நவர நாயகன்!! இயக்குனர் கூறிய உண்மை...

Ajith Kumar Karthik Sivaji Ganesan Gossip Today
By Edward Jun 27, 2024 06:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் நவர நாயகனாக திகழ்ந்து 80, 90 காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்தவராக இருந்தவர் நடிகர் கார்த்திக். முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்த கார்த்திக், பல சர்ச்சைகளிலும் வதந்திகளிலும் சிக்கி சினிமாவில் இருந்து ஒருக்கட்டத்தில் ஒதுக்கப்பட்டார். ஓவர் மதுப்பழக்கம், நடிகைகளுடன் கிசுகிசு, ஷூட்டிங்கிற்கு லேட்டாக வரும் பழக்கம் என்று பல விதத்தில் பேசப்பட்டு வந்தார்.

சிவாஜிக்கு நோ.. 11 மணிக்கு தான் வருவேன்னு கண்டீசன் போட்ட நவர நாயகன்!! இயக்குனர் கூறிய உண்மை... | Vikraman Open Karthick Reject Act With Sivaji

இதுகுறித்து இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் போது கார்த்திக் தன்னிடம் கூறி விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார். தாமதமாக வருகிறார் என்று எல்லோரும் கார்த்திக் சாரை குறை கூறுவார்கள்.

ஆரம்பத்தில், பாஸ் என்னால் 7 மணிக்கெல்லாம் எழுந்து வரமுடியாது, 11 மணிக்கு தா வருவேன் என்று சொன்னார். மகாபலிபுரம் பக்கத்தில் ஷூட்டிங் நடந்தது. டிராவலிங் மட்டும் ஒன்றரை மணிநேரம் எடுக்கும். அங்கயும் 11 மணிக்கு தான் வருவீங்களா என்று கேட்டதற்கு அங்கயும் 11 மணிக்கு தான் வருவேன் என்று சொன்னார்.

சிவாஜிக்கு நோ.. 11 மணிக்கு தான் வருவேன்னு கண்டீசன் போட்ட நவர நாயகன்!! இயக்குனர் கூறிய உண்மை... | Vikraman Open Karthick Reject Act With Sivaji

அவர் வருவதற்கு முன் வேறொரு ஆர்ட்டிஸ்ட் வைத்து ஷூட் எடுப்பேன் 11 மணிக்கு மேல் நீங்கள் காத்திருக்க வேண்டும், கோபித்துக்கொள்ளக் கூடாது, தயாரிப்பாளரிடம் புகார் கொடுக்கக்கூடாது என்று நான் கேட்டேன். அதற்கு ஓகே என்று சொன்னார் இரவு 12 மணி வரைக்கும் நடித்துக்கொடுத்துவிட்டு செல்வார். ஆனால், காலையில் வருவது மட்டும் கார்த்திக் சாருக்கு கஷ்டம்.

சிவாஜிக்கு நோ.. 11 மணிக்கு தான் வருவேன்னு கண்டீசன் போட்ட நவர நாயகன்!! இயக்குனர் கூறிய உண்மை... | Vikraman Open Karthick Reject Act With Sivaji

அதற்கு கார்த்திக் சார் என்னிடம், இதற்காகவே நான் சிவாஜி சார் படத்தில் நடிக்க பல முறை ஒதுக்கிவிட்டேன். 4, 5 வாய்ப்பு வந்தது, ஒரே படத்தில் தான் நடித்தேன், அதன்பின் சிவாஜி சார் படத்தில் நடித்தால் காலை 7 மணிக்கெல்லாம் ஷூட்டிங் போகணும் என்பதற்காக நடிக்கவில்லை என்று கார்த்திக் கூறியதாக இயக்குனர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.