காரில் குடித்துவிட்டு இயக்குனருக்கு ரூ. 2000 காசு கொடுக்கிறேனா!! பத்திரிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த நடிகர் விமல்..
தமிழ் சினிமாவில் களவாணி, வாகை சூட வா போன்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் விமல். இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த விமல், ஒரு படத்தினை கடன் வாங்கி தயாரித்து கடனாளியாகி மார்க்கெட் இழந்தார்.
பின் விலங்கு வெப் தொடர் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து ஒருசில படங்களில் நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் யூடியூப் பேட்டியொன்றில், தினமும் காலையில் காரை எடுத்துக்கொண்டு தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்களை கோடம்பாக்கத்தில் பார்த்தால் காரில் ஏற்றிக்கொண்டே குடித்துக்கொண்டு போவார்.
பின் சில நிமிடத்தில் இறக்கிவிட்டு கையில் 2 ஆயிரம் பணத்தை கொடுத்து இன்னொருநாள் கதை கூற சொல்லிவிட்டு அனுப்பிவிடுவாராம்.
இதனால் பலர் அவரிடம் கதை கூறவதில்லை என்றும் குடிக்கு அடிமையானதால் அவர் கையெழுத்து போட்ட பல சமயங்களில் நிதானம் இல்லாமல் இருந்தார் என்று கூறியிருந்தார்.
இதனை கேள்விப்பட்ட நடிகர் விமல், துடிக்கும் கரங்கள் என்ற படத்தின் பத்திரிக்கையாளர் காட்சியில் அவர்களிடம் பேசியுள்ளார். அதில், நான் குடித்து 45 நாட்களுக்கு மேலாகிறது.
மது அருந்திவிட்டு தினமும் ஒவ்வொரு இயக்குனராக கூட்டிச்சென்று 2 ஆயிரம் கொடுத்து அனுப்புவதாக அவதூறு பரப்புகிறார்கள் சிலர் யூடியூப் பத்திரிக்கையாளர்.
வாய்க்கு வந்தபடி
யூடியூப்பில் எழுதிவிடுவதாகவும் ஒரு
எக்ஸாம் அவர்களுக்கு வைக்க
வேண்டுமென அரசுக்கு கடிதம் எழுதவும்
இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகர்
விமல்.