படப்பிடிப்பில் முன்னணி நடிகர் போதையில் என்னிடம் அத்துமீறினார்!! பிரபல நடிகை வின்சி விளக்கம்..
மலையாள நடிகை
சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு சிலர் அத்துமீறி நடப்பது தற்போது அதிகரித்து வருகிறது. அப்படி மலையாள நடிகை ஒருவருக்கு முன்னணி நடிகர் போதையில் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட விஷயத்தை கூறி விளக்கம் கொடுத்திருக்கிறார். கேரள மாநிலம் பொன்னானி பகுதியை சேர்ந்த நடிகை வின்சி அலோசியஸ் விக்ருதி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.
வின்சி விளக்கம்
சமீபத்தில் தான் நடித்த ஒரு படத்தில் முன்னணி நடிகர் போதையில் அத்துமீறினார் என்று கூறியதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து அவர் அளித்த விளக்கம் கேரள திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாகியது.
ஒரு மலையாள படத்தில் முக்கிய ரோலில் நான் நடித்திருந்தபோது என்னுடன் சேர்ந்து நடித்த முன்னணி நடிகர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவதை நேரடியாக பார்த்தேன். அந்த நடிகர் போதையில் என்னிடமும் மற்றொரு நடிகையிடமும் அத்துமீறினார்.
இதனால் அந்த படத்தில் இருந்து விலக நான் தீர்மானித்தேன், ஆனால் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னிடம் மன்னிப்பு கேட்டதாலும், நான் நடிக்காவிட்டால் அந்த படம் வெளியாகாது என்பதாலும் வேறுவழியில்லாமல் நடித்துக்கொடுத்தேன்.
தனிப்பட்ட முறையில் அவர் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை, ஆனால் படப்பிடிப்பு தளத்திலும் பொது இடத்திலும் போதைப்பொருள் பயன்படுத்தி மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது, இதனால் தான் போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்கமாட்டேன் என்று கூறினேன் என நடிகை வின்சி அலோசியஸ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.