அதுலயும் 28 நாள் தான் இருக்குமா.. ஜியோவை பங்கமாக கலாய்த்த மீம்

Troll Memes Jio Recharge
By Parthiban.A Dec 22, 2021 12:30 PM GMT
Report

தற்போது டெலிகாம் நிறுவனங்களின் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தான் ரீசார்ஜ் பேக் விலையை ஏற்ற அதிகம் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

அதிலும் ஒரு மாத பேக் என்றால் அவர்கள் கணக்கு படி 28 நாட்கள் மட்டும் தான். இதை ட்ரோல் செய்யும் வகையில் சில மீம்கள் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

2022 புது வருடம் தொடங்க உள்ள நிலையில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இலவசமாக காலண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். அதே போல 'மாசா மாசா இவ்ளோ ரீசார்ஜ் பண்றோமே ஒரு கேலண்டர் தர கூடாதா' என வாடிக்கையாளர்கள் கேட்பது போலவும், "அதுலயும் ஒரு மாசத்துக்கு 28 நாள் தான் இருக்கும்" என ஜியோ சொல்வது போல அந்த மீம் இருக்கிறது.

இந்த மீம் தற்போது வைரல் ஆகும் நிலையில் அதை பார்த்து அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து வருகிறார்கள்.

  அதுலயும் 28 நாள் தான் இருக்குமா.. ஜியோவை பங்கமாக கலாய்த்த மீம் | Viral Meme Trolling Jio Sim Recharges