லட்சுமி மேனனுடன் காதல் விவகாரம்!! பிரஸ் மீட்டில் பயில்வானை மேடையிலேயே அசிங்கப்படுத்தி அனுப்பிய நடிகர் விஷால்..

Vishal Gossip Today Bayilvan Ranganathan
By Edward Apr 19, 2024 06:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷால், இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை அளித்திருக்கிறது. இந்நிலையில் ரத்னம் படத்திற்கான பிரஸ் மீட் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது. பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விஷாலிடம், பத்திரிக்கையாளர் பயில்வான் கேள்விகளை கேட்க வந்துள்ளார்.

லட்சுமி மேனனுடன் காதல் விவகாரம்!! பிரஸ் மீட்டில் பயில்வானை மேடையிலேயே அசிங்கப்படுத்தி அனுப்பிய நடிகர் விஷால்.. | Vishal Bayilvan Press Meet Lakshmi Menon Love

அப்போது பயில்வான், மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு சின்ன படம் தானே, நல்லா ஓடிச்சு என்று கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார். அதற்கு விஷால், யார் அது? ரங்கநாதன் என்று அறிந்ததும், சத்தியமா அவருக்கு நான் பதில் சொல்லமாட்டேன், என்று கண்டிப்போடு கூறியிருக்கிறார்.

எனக்கு அவர் கேள்விக்கு பதில் சொல்ல எனக்க விருப்பம் இல்லை என்றும் அண்ணனுக்கே தெரியும் நான் ஏன் பதில் சொல்லமாட்டேன் என்று. ஒரு பொதுச்செயலாளரா, தயவு செய்து சொல்கிறேன், இந்த பிரஸ் மீட் ஆரோக்கியமாக போய் கொண்டிருக்கிறது. என்னை பேசவிட்றாதீங்க, வேண்டாம். சத்தியமா அவருக்கு பதில் சொல்லமாட்டேன் என்று கூறியிருக்கிறார். இதன்பின் பயில்வான் அந்த இடத்தில் இருந்து உடனே எழுந்து கிளம்பி இருக்கிறார்.

விஷால் இப்படி நடந்து கொள்ள காரணமே, சில மாதங்களுக்கு முன் நடிகை லட்சுமி மேனன், விஷால் இருவரும் காதலித்ததாகவும், திருமணம் நடைபெறும் நிலையில் அவர்களது திருமணம் திடீரென நின்றுவிட்டதாகவும்.

லட்சுமி மேனனுடன் காதல் விவகாரம்!! பிரஸ் மீட்டில் பயில்வானை மேடையிலேயே அசிங்கப்படுத்தி அனுப்பிய நடிகர் விஷால்.. | Vishal Bayilvan Press Meet Lakshmi Menon Love

அதனால் லட்சுமி மேனன் கேரளாவுக்கே சென்றுவிட்டதாகவும் பயில்வான் பேசியிருந்தார். அதை கண்டித்து விஷால் கோபத்தில் மறைமுகமாக திட்டியிருந்தார். அதனால் தான் விஷால் பயில்வான் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.