கவுண்டமணியுடன் அந்த காட்சியா.. ஷாக்காகி பயந்துபோன நக்மா!! ஷாக்கான இயக்குனர் சுந்தர் சி..
முன்னணி இயக்குனராக இருக்கும் இயக்குனர் சுந்தர் சி, சமீபகாலமாக அரண்மனை மற்றும் இருட்டு போன்ற படங்களில் நடிகராகவும் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். தற்போது அரண்மனை 4 படத்தினை இயக்கி முடித்துள்ள நிலையில் படம் நாளை மே 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமன்னா, ராஷி கண்ணா முக்கிய ரோலில் நடித்துள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மேட்டுக்குடி படத்தில் நக்மா மற்றும் கவுண்டமணி இருவரும் வெள்வெட்டா வெள்வெட்டா என்ற பாடலுக்கு ரூயட் ஆடியது பற்றி பகிர்ந்துள்ளார். நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிற நடிகர்கள் என்றால் அது கவுண்மணி, கார்த்திக் தான் அவர்களுடன் பணியாற்றியது என்னுடைய கோல்டன் பீரியட். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் மாமா நீ மாமா பாடல் படத்தின் இடைவேளையில் வந்துவிட்டது.
வெங்கடேஷ் பட் இடத்தை பிடித்த மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
முதல் பாதியில் எப்படி வைத்தாலும் இடைவேளியில் வந்ததால் ரசிகர்களை எந்திரிக்க விடாமல் இருக்க கவுண்டமணி அண்ணனை ஆட வைத்தேன். இந்த பிரச்சனை மேட்டுக்குடி படத்திலும் வந்தது. நக்மாவுடன் டூயட் என்றதும் கவுண்டமணி அண்ணன் மகிழ்ச்சியாகிட்டாரு. கோவாவில் சூட்டிங் நடந்தது. அங்கு டிஸ்கோத்துக்கு போகும் போது லுங்கியுடன் வந்துட்டார்.
அதன்பின் அந்த பாடலின் சூட்டிங்கின் போது நக்மா என்னிடம், ஏன் கவுண்டமணி மைக்கேல் ஜாக்சன் லுக்கில் இருக்கிறார் என்று கேட்டார். உங்களுடன் டூயட் காட்சியில் ஆடத்தான் என்றது என்னோடு டான்ஸ்-ஆ என்று ஷாக்காகினார். ஆனால், அதன்பின் அந்த பாடலை பயங்கரமாக எஞ்சாய் செய்தார் நடிகை நக்மா.