நம்பவைத்து ஏமாற்றிய சூர்யா? நடுத்தெருக்குவுக்கு வந்த ஜெயம்ரவி பட இயக்குனர்..

suriya vishal jayamravi Karthik Thangavel adangamaru
By Edward Mar 25, 2022 02:50 PM GMT
Report

நடிகர் ஜெயம் ரவி, ராஷி கண்ணா ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படம் அடங்க மறு. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் கார்த்திக் தங்கவேல்.

ஒரே ஒரு படத்தின் வெற்றியை கொடுத்த கார்த்திக் தற்போது நடுத்தெருவிற்கு செல்லும் அளவிற்கு வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறாராம். அடங்கமறு படத்தின் வெற்றியை கண்ட பல நடிகர்கள் அவரை அணுகினார்கள்.

அப்படி சூர்யாவும் கார்த்திக் தங்கவேலை வைத்து ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகினாராம். ஆனால் தன்னுடைய கால்ஷீட் இல்லாததால் நடிகர் கார்த்தியிடம் அனுகியிருக்கிறார் இயக்குனர். இதனால் அப்படமும் கைவிடப்பட்டதாம்.

பின் ஜெயம்ரவியும் அடுத்ததாக நடிக்கவிருந்து அவரும் ஏமாற்றிவிட்டு வேறு ஒரு படத்தின் வேலைக்கு சென்றுவிட்டாராம். இப்படி இருக்கையில் நடிகர் விஷாலை வைத்து ஒரு கதை உருவாக்கி படத்தின் வேலைகளை ஆரம்பித்தார் கார்த்திக் தங்கவேல்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் என்னால் தயாரிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதற்கு காரணம் விஷால் வீரமே வாகை சூடவா படத்தின் பிளாப்பானதால் எப்படி பணத்தை போட்டு எடுப்பேன் என்று கூறி அந்த படத்தினை ட்ராப் செய்துள்ளாராம். இதனால் புலம்பி வருகிறாராம் இயக்குனர் கார்த்திக் தங்கவேல்.