ஆணவத்தில் நண்பர்களுக்கு விபூதி அடிக்கும் விஷால்.. இதுக்கு பேருதான் நம்பிக்கை துரோகமா..
தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்தால் தான் அவரை கொண்டாடும் அளவிற்கு ரசிகர்கள் தூக்கி செல்வார்கள். ஆனால் தன் தயாரிப்பு நிறுவனம் தான் இருகிறதே என்ற ஆணவத்தில் இருக்கிறார் நடிகர் விஷால். சமீபத்தில் Enemy, வீரமே வாகை சூடும் படத்தில் நடித்து பெரும் தோல்வியை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்து வருகிறாராம். காவல்துறையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நடிகை சுனைனா ஜோடியாக நடிக்கவுள்ளாராம். படத்தினை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்களாம்.
நண்பர்கள் தயாரிக்கும் படம் என்பதால் படப்பிடிப்பிற்கு 25 நாட்களாக தாமதமாக வந்துள்ளாராம் விஷால். இதனால் ஒரு நாளைக்கு 2 முதல் 5 லட்சம் வரை நஷ்டத்தை சந்தித்து வருகிறார்களாம்.
நஷ்டத்தால் யூனிட்டிற்கு அனைவரும் வந்தும் எல்லாம் தயார் நிலையில் இருக்கும் போதெல்லாம் விஷால் இப்படியாக தாமதமாக வந்து பெரிய நஷ்டத்தை கொடுத்து வருகிறாராம். இப்படியே போனால் விஷால் , சிம்பு நிலைக்கு தள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.
அவரைபோல் அதர்வா, விஷால் போன்ற நடிகர்கள் படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்து கெரியரை கெடுத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் கூறுகிறார்களாம்.