பணமே இல்லை என நாடகம் போட்ட விஷால்.. ஆனால் நீதிபதி கொடுத்த ஷாக்

Vishal
By Parthiban.A Aug 26, 2022 01:30 PM GMT
Report

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். அவர் தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வந்தாலும் பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

அவர் தற்போது லத்தி, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஷால் வாங்கிய 21 கோடி ருபாய் கடனை திருப்பி கொடுக்கவில்லை என லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறது.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தன்னிடம் பணம் இல்லை என விஷால் கூறி இருக்கிறார். 15 கோடியை உடனே நீதிமன்றத்தில் செலுத்த சொன்னதற்கு தான் விஷால் நீதிமன்றத்தில் இப்படி கூறி இருக்கிறார். என்னும் பணமே இல்லை, ஒரே நாளில் 18 கோடி அளவுக்கு நஷ்டம் ஆகிவிட்டது, இன்னும் ஆறு மாதம் அனால் கூட என்னால் இந்த பணத்தை செலுத்த முடியாது என கூறினார்.

பெரிய படங்களில் நடித்து வரும் விஷால் நாடகம் போடுகிறார் என லைகா தரப்பு கூறி இருக்கிறது. அதை கேட்ட நீதிபதி, விஷாலின் சொத்து விவரங்களை உடனே சமர்ப்பியுங்கள் என உத்தரவிட்டு இருக்கிறார்.  

பணமே இல்லை என நாடகம் போட்ட விஷால்.. ஆனால் நீதிபதி கொடுத்த ஷாக் | Vishal Vs Lyca Case Judge Asks For Asset Details