லோகேஷ் போட்ட வலையில் தானாக சிக்கிய ஆடு.. கடனை அடைக்க விஜய்யை வைத்து விஷால் போட்ட பிளான்
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்றாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சமீபகாலமாக ஈர்க்காமல் இருந்து வருகிறார் நடிகர் விஷால். பல மோசடிகளில் சிக்கியும் பிரச்சனைகளில் சிக்கியும் வருகிறார் விஷால்.
அப்படி சமீபத்தில் லத்தி படத்தில் ஏற்பட்ட விபத்தால் ஓய்வில் இருந்தும் வருகிறார். இதற்கிடையில் நடிகை அபிநயாவுடன் காதல் திருமணம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் விஜய்யை வைத்து 67வது படத்தினை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ், விஷாலை அப்படத்தில் நடிக்க வைக்க பிளான் போட்டிருக்கிறார். இதற்காக விஷால் வீட்டை தேடி சென்ற லோகேஷ் கதையை கூறி கமிட் செய்திருக்கிறாராம்.
ஏற்கனவே அப்பா செய்து வரும் கிரானெட் பிஸினஸ் பெரிய நஷ்டம் ஏற்பட்டு கடன் பிரச்சனையில் இருந்து வருகிறார் விஷால். இதற்கு விஷால் எந்த பதிலும் கூறாமல் மெளனமாக இருந்து வருகிறார்.
இதற்கு காரணம் பெரிய தொகையை சம்பளமாக கேட்டு கடன் பிரச்சனையை அடைக்க இது தான் சமயம் என்று பிளானை போட்டு வருகிறாராம். இவரின் கேரக்டருக்கு ஏற்கனவே பிரித்விராஜ், அர்ஜுன் மறுத்த நிலையில் விஷால் இதை ஏற்றுக்கொண்டு நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.