திருமணத்திற்கு முன் மனைவிக்கு கேன்சர்.. விவாகரத்து முடிவு! எமோஷ்னலாக பேசிய விஷ்ணு விஷால்

Vishnu Vishal
By Kathick Jul 10, 2025 02:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் ஜுவாலா கட்டா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சமீபத்தில்தான் பெண் குழந்தை பிறந்தது. நடிகர் அமீர் கான்தான் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.

திருமணத்திற்கு முன் மனைவிக்கு கேன்சர்.. விவாகரத்து முடிவு! எமோஷ்னலாக பேசிய விஷ்ணு விஷால் | Vishnu Vishal Talk About His First Wife

இந்த நிலையில், முதல் மனைவி குறித்தும் ஏன் விவாகரத்து ஆனது என்பது பற்றியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார் விஷ்ணு விஷால்.

எமோஷ்னல் பேட்டி

"நான்கு ஆண்டுகள் காதலித்து அதன் பின்தான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் அவருக்கு கேன்சர் இருக்கிறது என தெரியவந்தது. ஆனாலும் கடைசிவரை ஒன்றாக வாழ வேண்டும் என்று அவரை திருமணம் செய்துகொண்டேன்.

திருமணத்திற்கு முன் மனைவிக்கு கேன்சர்.. விவாகரத்து முடிவு! எமோஷ்னலாக பேசிய விஷ்ணு விஷால் | Vishnu Vishal Talk About His First Wife

திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அதே காலகட்டத்தில் நான் படங்களில் அதிகம் கவனம் செலுத்தினேன். அதனால் எனக்கு அவர் மீது அக்கறை இல்லை என நினைத்துக்கொண்டார். சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வந்தது. விவாகரத்து முடிவை அவர் தான் எடுத்தார், நான் அல்ல" என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.