விவேக் உயிரிழப்பு குழப்பமாக உள்ளது.. மனைவி கூறிய ஷாக்கிங் நியூஸ்
நடிகர் விவேக்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரை ஜாம்பவான்களை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலசந்தரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் விவேக்.
APJ அப்துல்கலாம் அவர்களின் வார்த்தையை வேத வாக்காக ஏற்று 1 கோடி மரம் நடுவதை தன்னுடைய வாழ்நாள் லட்சியமாக எடுத்துகொண்டு அதற்கான வேலைகளை கவனித்து வந்தவர் விவேக்.
கொரோனா காலத்தில் இவர் திடீரென உயிரிழக்க எல்லோருக்கும் மாபெரும் அதிர்ச்சி ஆனது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது கணவர் விவேக் அவர்களின் உயிரிழப்பு குறித்து மனைவி பகிர்ந்துள்ளார்.
ஷாக்கிங் தகவல்
அதில், "கொரோனா சமயத்தில் மக்கள் குழப்பமான மனநிலையில் இருந்தார்கள். விவேக் கூட தடுப்பூசி போடலாமா வேண்டாமா என்று ஆலோசனை செய்தார்.
இரண்டு முறை தடுப்பூசி போட முயற்சி செய்ய 3வது முறை தடுப்பூசி போட்டுக் கொண்டார், ஆனால் அடுத்த நாள் அவர் உயிரிழந்துவிட்டார். அவர் இறந்ததற்கான காரணம் என்னவென்று எனக்கு இப்போது வரை தெரியவில்லை.
விவேக் அவரது உடலை நன்றாக கவனித்து கொள்வார். வாக்கிங், உடற்பயிற்சி என தன்னை நன்றாக பார்த்துக் கொண்டவர் எப்படி இறந்தார் என்ற குழப்பம் எங்களுக்கு இன்று வரை உள்ளது" என்று கூறியுள்ளார்.