நான் சந்தோஷமாக இல்லை!! மனமுடைந்து பேசிய VJ அர்ச்சனா..
Archana Chandhoke
Actress
Saregamapa Lil Champs
By Jai
விஜே அர்ச்சனா சந்தோக்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று பிரபலமானவர் தான் விஜே அர்ச்சனா சந்தோகி.
சமீபத்தில் சீரியல் நடிகை லட்சுமியின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அர்ச்சனா, தன் வாழ்க்கையில் ஏற்பட்ட வலியும் வேதனையும் ஒளிந்திருக்கிறது என்று பேசியுள்ளார்.

அதில் தன்னைத்தானே பேட்டி எடுத்தல் என்ன கேள்வி கேட்பாய் என்ற கேள்விக்கு, நான் முதலில் என்னிடம், நீ சந்தோஷமாக இருக்கிறாயா? என்று கேட்பேன். அதற்கு நான், கண்டிப்பாக சந்தோஷம் கிடையாது என்றுதான் சொல்லுவேன்.
வாழ்க்கையில் மனநிறைவு இருக்கிறது, எல்லாமே முழுமையாக இருக்கிறது. நாம் ஆசைப்பட்ட விஷயங்கள், உழைப்பு என்று எல்லாமே கிடைத்துவிட்டது, ஆனால் சந்தோஷமாக இருக்கிறாயா என்று கேட்டால், அர்ச்சனாவிடம் அந்த சந்தோஷம் இல்லை என்று கூறியிருக்கிறார்.