தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாரா வாங்கிய புதிய கார்.. விலை இவ்வளவு லட்சமா
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் அர்ச்சனா. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த சரிகமப 5வது சீசனை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இவரை போலவே இவரது மகள் சாராவும் ஜீ தமிழில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது இல்லை.

ஆனால் சாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாடம் செய்யும் விஷயங்கள், தனது சித்தியுடன் இணைந்து எடுத்த ரீல்ஸ் என பல பதிவுகள் போட்ட வருகிறார். இந்த நிலையில், தற்போது அவர் ஒரு மாஸான விஷயத்தை பதிவு செய்துள்ளார்.
அதாவது, சாரா Mahindra Batman காரை வாங்கியிருக்கிறார். குடும்பத்துடன் சென்று அந்த காரை அவர் வாங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இந்த புதிய காரின் விலை ரூ. 27 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.