ஒன்றரை வருடங்களாக எங்கே போனீர்கள்! விஜே சித்ரா தற்கொலையை அரசியல் புள்ளிகளால் திசைமாற்றம்..
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகையும் தொகுப்ப்பாளினியுமான விஜே சித்ராவின் பல தகவல்கள் ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கணவர் சித்ரா தான் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில் ஹேம்நாத் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
சமீபத்தில் ஜாமினில் வெளிவந்து சித்ரா வழக்கு சம்பந்தமாக அரசியல் புள்ளிகள் என்னை மிரட்டுவதாக கூறி வந்தார். ஆனால் சித்ரா மரணமடைந்த போது, இந்த தகவல் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. ஏனென்றால் சித்ராவின் மரணம் நிகழ்ந்த அன்று அவர் கூறிய செய்தியே வேறு. இப்போது அதை மாற்றி வேறு மாதிரி பேசி வருகிறார்.
அப்போது அவருடைய நண்பரிடம் அவர் பேசும் ஆடியோ கூட வெளியாகி இருந்தது. அதில் சித்ரா, தொலைக்காட்சி நடிகருடன் சேர்ந்து ஆடியதால் தனக்கு வருத்தம் என்று தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து விஜே சித்ராவின் தோழியாக ரேகா நாயர், சித்ரா ஹேம்நாத் வீட்டில் காண்டமும், கஞ்சா போதை பொருட்களையும் நான் பார்த்திருக்கிறேன் என்று கூறியதோடு ஹேம்நாத் சிலருடன் சேர்ந்து சித்ராவை கொலை செய்துவிட்டு இப்படியான நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.
இதற்கு பின்னணில் பலர் இருப்பதாகவும் இவ்வளவு நாள் அமைதியாக இருந்த ரேகா ஹேம்நாத் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களை கூறி இருக்கலாமே. ஏன் அவர்கள் இந்த விஷயங்களை மறைக்கிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்து வருகிறது.
சித்ராவை அசிங்கப்படுத்த சிலரின் சதி செயலாக இருக்கும் என்றும் இந்த செய்தியை கேட்டும் சித்ரா பெற்றோர்கள் அமைதியாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.