தோழியுடன் நெருக்கமான செல்ஃபி! விஜே ஜாக்லினை அசிங்கப்படுத்திய ரசிகர்களுக்கு பதிலடி

anchor televition Jacquline Lydia
By Edward Jun 02, 2021 09:00 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்லின் லிடியா. இதையடுத்து பல நிகழ்ச்சிகளை விஜே தர்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.

தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தேன்மொழி பிஏ சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். சின்னத்திரைக்கு அடுத்து நடிகை நயன் தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார். சில நிகழ்ச்சிகளில் தற்போது சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டும் வருகிறார்.

நடிப்பு தாண்டி சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின், சமீபத்தில் அவரது தோழியுடன் செல்ஃபி எடுத்து புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தோழியை பார்த்து ஆணா பெண்ணா என்று கேலிசெய்து அசிங்கப்படுத்தி கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த ஜாக்லின், அசிங்கமா Photos-ல Comment பண்றீங்க தப்பா பேச அவ்ளோ ஆசையா என்றும், அவங்க அப்பா அம்மா காசுல அவங்க முடி வெட்ராங்க என்று பதிலடி கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.