இதுதான் என் தலையெழுத்து! ஒரே வருடத்தில் விவாகரத்து! விஜே மகேஷ்வரி ஆதங்கம்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றியும் ஒருசில படங்களில் நடித்தும் பிரபலமானவர் விஜே மகெஷ்வரி. தற்போது நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.
கடந்த 10 வருடங்களுக்கு முன் சாணக்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரே வருடத்தில் ஒரு மகன் இருக்கும் போது விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். 10 ஆண்டுகளுக்கும் மேல் தனிமையில் அம்மா மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார் விஜே மகேஷ்வரி.
இதுகுறித்து மாடல் கோபிநாத் எடுத்த பேட்டியொன்றில் திருமண வாழ்க்கை உள்ளிட்ட பலவற்றை குறிப்பிட்டு கூறி ஆதங்கப்பட்டுள்ளார். ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று தனியாக இருந்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
யாராவது கைக்கோர்த்து போகும் போது நான் கஷ்டப்பட்டு இருக்கிறேன். இதுதான் என் தலையெழுத்து. எனக்கானவர் வரும் போது என்னையும் என் மகனையும் என் அம்மாவையும் என் கேரியரையும் நன்றாக பார்த்துக் கொள்பவராகவும் ஏற்றுக்கொள்பவராகவும் இருக்க வேண்டும்.
அதில் எனக்கு பயன் என்பதால் பலமுறை அட்ஜெஸ்ட் செய்து வந்தேன். இனிமேல் என்னால் அட்ஜெஸ்ட் செய்ய முடியாது. என் மகன் இதனால் பாதிக்கப்படுவான் என கூறியுள்ளார்.