அனுபமாவுக்கு நடந்ததுதான் எனக்கும் நடந்துச்சு..2வது கல்யாணம்!! விஜே மகேஸ்வரி ஓபன் டாக்..
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய முன்னாள் காதலரால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல கொடுமைகளுக்கு ஆளானேன் என்று அதிர்ச்சி தகவலை கூறினார்.
மேலும் தன்னை மொத்தமாக அந்த நபர் கட்டுப்படுத்த பார்த்தார், இனிமேல் ஒத்து வராது என்று நிரந்தரமாக பிரிந்துவிடலான் என்று முடிவெடுத்தேன் என்றும் திருமணம் செய்து 11 குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும் திட்டமிட்டேன், ஆனால் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பால் இப்போது திருமணத்தின் மீதே பயம் வந்துவிட்டது என்றும் கூறினார்.

விஜே மகேஸ்வரி
இந்நிலையில் அனுபமாவுக்கு நடந்ததை போன்று தனக்கும் நடந்தது என்று தன் முதல் திருமண வாழ்க்கை குறித்து விஜே மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
அதில், எல்லோருமே கல்யாணம் பண்ணும் போது இந்த வாழ்க்கை ரொம்ப ஜாலியாக, சந்தோஷமாக இருக்க வேண்டும். இந்த வாழ்க்கைதான் நமக்கு கடைசி வரைக்கும் வரவேண்டும் என்று நினைப்போம். அதேபோலத்தான் நானும் நினைத்தேன், ஆனால் அங்கேயிருக்கும் சில விஷயங்கள் நமக்கு அதிர்ச்சியை கொடுத்துவிடும்.

அதாவது நம் வாழ்க்கை துணையுடைய கேரக்டர் நாம் எதிர்பார்த்தபடி இல்லாமல் இருக்கும்போது நமக்கு ஒரு ஏமாற்றம் கிடைக்கும், அதுதான் என் வாழ்க்கையிலும் கிடைத்தது. சமீபத்தில் அனுபமா தன் காதல் வாழ்க்கை குறித்து பேசினார். அதில் அவங்க சொல்ற விஷயங்களை எல்லாம் பார்த்தால் நான் 20 வருடத்திற்கு முன் அனுபவித்த பிரச்சனைகள் போலவே தான் இருந்தது.
என் திருமண வாழ்க்கையில் நானும் எவ்வளவோ பிரச்சனைகளை சமாளித்துக் கொண்டிருந்தேன், ஆனால், அந்த நபர் ஒருநாள் ரெமோ போல் நடந்து கொள்வார். அடுத்தநாள் அம்பி போல் நடந்து கொள்வார், ஆனால் அதையெல்லாம் தாங்குற மாதிரி நம் உடல்நிலையும், மனநிலையும் இருக்காது. பொதுவாக நீங்க்ள் பார்த்தீங்க என்றால் உங்களுக்கே தெரியும், அவங்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறவர்களுடைய முகத்திலேயே ஒரு பொலிவு தெரியும்.

ஆனால் அது நம் வாழ்க்கையில் இல்லை. அதனால்தான் ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு இருக்க கூடாது என்று விட்டுவிடுவது நல்லது என்று முடிவெடுத்திருக்கிறோம். டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பிலிருந்து தினமும் அழுதுக் கொண்டிருப்பதைவிட அதில் இருந்து வெளியே வந்துவிடுவது நல்லது என்று கூறியிருக்கிறார்.
2வது கல்யாணம்
மேலும், 2வது கல்யாணம் குறித்து பேசுகையில், இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை, என் பையன் வளர்ந்துவிட்டான், அவன் என்னை நன்றாகவே புரிந்துக் கொண்டு இருக்கிறார். என் வாழ்க்கையில் இனி ஒரு துணை தேவையென்றால் அது நானும் என் பையனும் எடுக்கிற முடிவாக இருக்கும் அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ளார் விஜே மகேஸ்வரி.