நிறைய அவமானப்படுத்துவாங்க!! நிகழ்ச்சியில் கண்கலங்கி அழுத விஜே மணிமேகலை..
மணிமேகலை
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தற்போது சின்னத்திரை பிரபலமாக கொடிக்கட்டி பறந்து வருபவர் தொகுப்பாளினி மணிமேகலை. விஜய் டிவியில் கடந்த ஆண்டு நடைபெற்ற குக் வித் கோமாளி 5ல் விஜே பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் மணிமேகலை.
டான்ஸ் ஜோடி டான்ஸ்
அவருக்கும் பலரும் ஆதரவு அளித்த நிலையில் மணிமேகலை விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவியுள்ளார். அந்தவகையில் பிரபல நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக விஜே விஜய்யுடன் இணைந்துள்ளார். சமீபத்திய எபிசோட்டில் மணிமேகலை எமோஷ்னலாக பேசி கண்கலங்கிய வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அதில், நான் கடந்த 8 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருக்கிறேன். ஒரு காமெடி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தபோது, இவங்க ஆங்கர்னா லீட் கொடுப்பாங்க, லிங்க் கொடுப்பாங்க, இவங்கள பர்ஃபார்ம் பண்ணவிட்டா என்ன வரும் என பலரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், இப்போ மணிமேகலை சூப்பரா பர்ஃபார்ம் பண்ணுவாங்க, அவங்களுக்கு ஆங்கரிங் வரும் என்று சொல்லும் அளவிற்கு இப்போ மாற்றிவிட்டேன்.
மக்களை நாம் எதுவாக வேண்டுமானாலும் நினைக்க முடியும், நாம உழைச்சா, நாம நினைச்சா வரலாம் என்று மணிமேகலை டான்ஸ் ஜோடி டான்ஸில் கலந்து கொண்ட போட்டியாளர் மோகனுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். மணிமேகலை இந்த பேச்சை கேட்டு பாபா சங்கர் மேடைக்கு வந்து மணிமேகலை புகழ்ந்து பேசியிருக்கிறார்.