அதுக்கான அவசியம் ஏற்படல!! பிரியங்கா பற்றி வாய்த்திறந்த மணிமேகலை..
மணிமேகலை
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருபவர் தான் விஜே மணிமேகலை. கடந்த ஆண்டு நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் 5ல் பிரியாவுடனான கருத்து வேறுபாடு காரணமாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். தற்போது ஜீ தமிழில் துவங்கவுள்ள புது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் என்ற தகவலை வெளியிட்டார் மணிமேகலை.
அதுக்கான அவசியம் ஏற்படல
சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ஜீ தமிழில் இதற்கு முன் நிகழ்ச்சி பண்ணியது கிடையாது, அதனால் ஆரம்பத்தில் சின்னதா யோசித்தேன். ஆனால் ஒரு பெரிய சண்டைச் சச்சரவுக்குப்பின் ஒரு வாய்ப்பு வருகிறது என்றால் நமக்கு நல்லதா இருக்கும் என்று உள்மனசு சொன்னது.
நான் எப்பவுமே என் உள்மனசு சொல்றதை அப்படியே கேட்பேன். அதனால் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். 6 மாதம் போயிருக்கும் டிஜேடி அனுபவம். ரொம்பவே நல்லா இருந்தது. என் வேலையை சுதந்திரமா முழு ஈடுபாட்டுடன் செய்தேன்.
மேலும் கடந்தாண்டு சம்பவத்திற்கு பின் பிரியங்கா கூட பேசுகிற சூழல் எதுவும் இருந்ததா என்ற கேள்விக்கு, ’அதுக்கான அவசியம் ஏற்படவில்லை. என்னை பொறுத்தவரை அது முடிஞ்சு போப சேப்டர் என்று கூறியிருக்கிறார் மணிமேகலை.