வாய்ப்புக்காக யாருடனும் அட்ஜஸ்ட் செய்ய மாட்டேன்! உண்மையை உடைத்த தொகுப்பாளினி...

television arjun vjparvathy survaivor
By Edward Oct 12, 2021 02:26 AM GMT
Report

சினிமாவில் பல பிரபலங்கள் அறிமுகமாவதற்கு வாய்ப்பு தேடும் போது பல கஷ்டங்களை அனுபவித்துள்ளதாக கூறி வரும் சூழலில் நடிகைகள் பல இந்த மாதிரியான கொடுமைகள் தங்களுக்கு நடந்துள்ளது என மீடு மூலம் கூறி வருகிறார்கள். அந்தவரிசையில் யுடியூபில் விஜேவாக பணியாற்றி பிரபல தொலைக்காட்சி சேனலில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகி வருபவர் விஜே பார்வதி.

சமீபத்தில் சர்வைவர் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பார்வதி, தன்னை பல தயாரிப்பாளர்கள் படத்தில் நடிக்க அழைப்பதாகவும், அதேசமயம் தன்னிடம் அத்து மீறி நடக்க முயல்வதாகவும், அதனால் அந்த தயாரிப்பாளர்களின் வாய்ப்பினை தவிர்க்க நேரிடுவதாகவும் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு வரும் அனைத்து பட வாய்ப்பும் இதன் காரணத்தினாலேயே தான் இழந்துவிட்டதாக விஜே பார்வதி கூறுகிறார்.

தற்போது தனக்கென்று நடிப்பதற்கு ஒரு படம் கூட இல்லை என்பதை வெளிப்படையாகக் கூறாமல், இவ்வாறு மறைமுகமாக தயாரிப்பாளர்கள் மீது குற்றம்சாட்டுகிறார். இவரின் காரணம் ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பதுபோல் இருக்கிறது. ஏற்கனவே இவரை கலாய்ப்பதில் ஆர்வம் காட்டி வரும் நெட்டிசன்களுக்கு இவர் கூறிவரும் கருத்துக்கள் சாதகமாக அமைந்துவிடுகிறது.

இதையெல்லாம் தாண்டி, ‘தான் வாய்ப்புக்காக யாரிடமும் வழுக்கி விழவில்லை என்றும் வாய்ப்பை தவறவிடலாம் ஆனால் வாழ்க்கையை தவறவிடக் கூடாது’ என்றும் விஜே பார்வதி செயல் பட்டு வருவதாககூறியுள்ளார்.