திருமணமாகி ஒரு வருஷமாகப்போகுது!! கணவருடன் ஹனிமூனுக்கு பிளான் போடும் VJ பிரியங்கா...

Priyanka Deshpande Star Vijay Italy
By Edward Apr 10, 2026 04:30 PM GMT
Report

பிரியங்கா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தன்னுடைய தனித்துவமான நகைச்சுவையோடு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார் பிரியங்கா.

திருமணமாகி ஒரு வருஷமாகப்போகுது!! கணவருடன் ஹனிமூனுக்கு பிளான் போடும் VJ பிரியங்கா... | Vj Priyanka Deshpande Plan 1 Yr Anniversary Italy

முதல் திருமணம் ஏமாற்றத்தில் முடிய, சில ஆண்டுகளாக அம்மா, சகோதரர் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார் பிரியங்கா. கடந்த ஆண்டு பிரபல டிஜே வசி என்பவருடன் திருமணத்தை முடித்தார் பிரியங்கா.

1 வருட திருமணநாள்

திருமணமாகிய பிரியங்கா தன்னுடைய வேலைக்காக சென்னையும், வசி லண்டனிலும் வசித்து வருகிறார்கள். கிடைக்கும் நேரத்தில் இருவரும் சந்தித்து தங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

திருமணமாகி ஒரு வருஷமாகப்போகுது!! கணவருடன் ஹனிமூனுக்கு பிளான் போடும் VJ பிரியங்கா... | Vj Priyanka Deshpande Plan 1 Yr Anniversary Italy

வரும், ஏப்ரல் 16 ஆம் தேதியோடு திருமணமாகி ஒரு ஆண்டை நிறைவு செய்யவுள்ளார்கள் பிரியங்கா - வசி. அதை கொண்டாட, தன்னுடைய கணவர் வசியுடன் இத்தாலிக்கு பறந்துள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து என்ன பிளான் போடுவது என்று யோசித்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் பிரியங்கா.

GalleryGalleryGallery