திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் 10ல் மீண்டும் VJ பிரியங்கா தேஷ்பாண்டே!! வீடியோ..

Sasikumar Ma Ka Pa Anand Priyanka Deshpande Super Singer Star Vijay
By Edward Apr 30, 2025 02:30 PM GMT
Report

VJ பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் VJ பிரியங்கா தேஷ்பாண்டே, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் 10ல் மீண்டும் VJ பிரியங்கா தேஷ்பாண்டே!! வீடியோ.. | Vj Priyanka Deshpande Return In Super Singer 10

சமீபத்தில், வசி என்பவரை திடீரென விமரிசையாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த பிரியங்கா, விஜய் டிவியில் இருந்து விலகிவிட்டார் என்று செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

சூப்பர் சிங்கர் 10ல் மீண்டும்

இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் விஜய் டிவியில் இணைந்திருக்கிறார் பிரியங்கா. சூப்பர் சிங்கர் சீசன் 10ல் மீண்டும் மாகாபா ஆனந்துடன் தொகுத்து வழங்கியுள்ளார் பிரியங்கா.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குநர் சசிகுமார் வந்துள்ள பிரமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.