இனிமே அந்த தப்ப பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணு!! விஜே பிரியங்காவால் கண்ணீர் விட்ட அம்மா
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே. தன்னுடைய தனித்துவமான காமெடியால் மக்களை மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியை எடுத்து செல்லும் குணம் கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன் டெக்னீஷியன் பணியாற்றிய பிரவீன் குமாரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு கணவர் புராணம் பாடி வந்த பிரியங்கா கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் பிரியங்கா தன் வேலையை பார்த்து வருகிறார். சுமார் 15 ஆண்டுகளை தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் பிரியங்கா அவரது அம்மாவுடன் சேர்ந்து 15 ஆண்டுகள் கொண்டாடியும் பேட்டியில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்துள்ளார். உன் வாழ்க்கை பண்ண ஒரு தப்பை மீண்டும் அதை பண்ணக்கூடாது என்று சத்தியம் கேட்டிருக்கிறார் அவரது அம்மா.
அவள் கண்ணு கலங்கினால் எனக்கு வேதனையாக இருக்கும், அதை பார்க்க முடியாது, அவள் எனக்கு பெட் ஆஃப் தி பேமிலி என்று கூறியிருக்கிறார். இதற்கு பிரியங்கா, அம்மாவை கஷ்டப்பட வைக்கக்கூடாது, தலை குணிய வைக்க கூடாது என்பது தான் எனக்கு இருந்தது.
நான் ஒரு விசயத்திற்கு ஆசைபடுகிறேன் என்றால் அவளுக்கு பிடிக்காமல் இருந்தால் கூட அதை பண்ணுவாங்க. நான் தப்பு பண்ணிட்டேன் என்று அவளிடம் போகும் போது நீ என்ன பண்ணியோ அதை பண்ணு. பல விசயங்களை கண்டிப்பாங்க, எந்த முடிவுகளிலும் எல்லாத்திலையும் அவள் என் கூட இருப்பா என்று பிரியங்கா தெரிவித்திருக்கிறார்.