VJ சித்து.. இஞ்சினீயரிங் படிக்கச் சொன்னா என்னடா பண்ணிருக்க
யூடியூப் பிரபலம் சித்து தான் படித்த இஞ்சினீயரிங் கல்லூரிக்கு மீண்டும் நண்பர்கள் உடன் சென்று தனது கல்லூரி கால நினைவுகளை பகிரும் வீடியோ தற்போது வெளிவந்திருக்கிறது.
காலேஜில் சேரும் போதே எந்த க்ரூப் எடுக்கப்போகிறார் என கேட்டால், ஹோட்டல் மெனு போல என்ன இருக்கு என லிஸ்ட் கேட்டு, அதில் EEE பெயர் பேன்சியாக இருக்கிறது என சொல்லி தேர்வு செய்திருக்கிறார்.
அதன் பின் காலேஜுக்கு தினமும் செல்லாமல் வெளியில் இருக்கும் ஒரு டீ கடையில் தான் உட்கார்ந்து இருப்பாராம். விருப்பம் இருந்தால் காலேஜுக்கு போவது.. இல்லை என்றால் அங்கே இருக்கும் கட்டிலில் மாலை வரை படுத்திருந்து கேடிவியில் படம் பார்ப்பாராம்.
அந்த காலத்திலேயே புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வைத்து சுற்றி இருக்கிறார் அவர். படிப்பை தவிர எல்லா வேலையையும் செய்திருக்கிறார். அதனால் தான் என்னமோ சித்து இன்ஜினியர் ஆகாமல் மக்களை என்டர்டெயின் செய்யும் நபராக மாறி இருக்கிறார்.
நீங்களே வீடியோவில் பாருங்க..