பிரியங்காவுக்கும் ஜெயம் ரவிக்கும் அதைமீறிய விஷயம் இருக்கு..கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..
பிரதர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படத்தில் நடித்துள்ளார்.
பிரியங்கா மோகன், நட்ராஜ், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வரும் அக்டோபர் 31ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.
அமரன், ப்ளடி பெக்கர் போன்ற படங்களுடன் ரிலீஸாகவுள்ல இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடிவி கணேஷ், பிரியங்கா மோகன் தான் மிகவும் லக்கி என்ற பெயரை வாங்கியுள்ளதாகவும் அவரை ஒரு படத்தில் சேர்த்தால் அந்தப்படம் ஹிட் என்ற பெயரை பிரியங்கா பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஹைதராபாத் சூட்டிங்கில் இருப்பதால் இந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை.
ஜெயம் ரவி பிரியங்கா கெமிஸ்ட்ரி
ஜெயம் ரவிக்கும் பிரியங்கா மோகனுக்கும் இடையில் கெமிஸ்ட்ரியை தாண்டிய ஒரு விஷயம் உள்ளதாகவும் விடிவி கணேஷ் பாராட்டியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக ஒரு மாத காலம் இருவரும் இணைந்து இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைவரும் ஃபேமிலி மாதிரியே பழகியதாக விடிவி கணேஷ் தொடர்ந்து ஜெயம் ரவியை கலாய்த்துள்ளார். அவரோ, விடிவி கணேஷை பார்த்து கையெடுத்து கும்பிட்டதை பார்க்க முடிந்தது. அவர் சிரித்தபடி சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பதால் பார்ப்பவர்களுக்கு கவலைகள் மறந்துவிடுவதாகவும் விடிவி கணேஷ் காமெடியாக தெரிவித்துள்ளார்.